மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்து விட்டதாக அவரது கணவர் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் நந்தினி.
இவர் நடிகர் யோகேஸ்வரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த மைனா நந்தினிக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை அவரது கணவர் தெரியப்படுத்த திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.