விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று Mr & Mrs சின்னத்திரை. இந்நிகழ்ச்சியின் 2வது சீசன் அண்மையில் நடந்தது.
அதில் சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் மூலம் மைனா என்ற பெயரை அடைமொழியாக பெற்ற நந்தினி தனது கணவர் யோகேஷுடன் கலந்துகொண்டார்.
இறுதிக்கட்ட நிகழ்ச்சி வரை இருவரும் சூப்பராக விளையாடினார்கள்.
அடுத்து மைனா சீரியல்கள் ஏதாவது நடிப்பார் என்று பார்த்தால் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஏற்கெனவே அவர் கமல்ஹாசன் படத்தில் கமிட்டாகியுள்ள நிலையில் இப்போது கார்த்தி நடிக்கும் விருமன் படத்திலும் கமிட்டாகியுள்ளாராம்.
கார்த்தியுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்து இந்த செய்தியை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
View this post on Instagram