தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன் ஒளிபரப்பாகியுள்ள நிலையில் ஆறாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் சாமானிய போட்டியாளர்கள் மூவர் உட்பட மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களில் ஒருவராக மைனா நந்தினி பங்கேற்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இவர் நேற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் ஏன் என்ற கேள்வியை எழுப்பி வருகிறது.
கடைசி நிமிடத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மைனா நந்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் சில தினங்களில் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.