Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குறுகிய காலத்தில் பெரிய உயரத்திற்கு லோகேஷ் கனகராஜ் வர காரணம் இதுதான்: இயக்குனர் மிஷ்கின்

mysskin-shared-about-lokesh-kanagaraj-shooting-style

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்து வரும் இவர் தற்போது மாவீரன் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

இது குறித்து அவ்வப்போது புது புது அப்டேட்களை தரும் இயக்குனர் மிஷ்கின் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படபிடிப்பு தளத்தில் லோகேஷ் கனகராஜின் செயல்பாடுகளை புகழ்ந்து கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.p

அதில் அவர், லியோ படத்தில் சிறிய வில்லன் ரோலில் நடித்துள்ளேன். படப்பிடிப்பு தளத்தில் லோகேஷ் கனகராஜ் துள்ளி குதிக்கும் ஒரு புலி போல் செயல்படுகிறார். அதுதான் இந்த குறுகிய காலத்தில் அவர் இவ்வளவு பெரிய உயரத்திற்கு வர காரணம் என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன்” எனக்கூறி லோகேஷை புகழ்ந்து தள்ளியுள்ளார். இவரது இந்த சுவாரசியமான தகவல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

mysskin-shared-about-lokesh-kanagaraj-shooting-style
mysskin-shared-about-lokesh-kanagaraj-shooting-style