Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நான் ரெடி”பாடலை கொரியன் வெர்ஷினில் மாற்றிய கொரியா நாட்டை சேர்ந்த பாடகர்..வீடியோ இதோ

naa-ready-song-korean-version-video

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்ததை தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து வெளியான சூப்பர் ஹிட் பாடலான ‘நான் ரெடி தான்’ பாடல் கொரியன் வெர்ஷனில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, தென் கொரியா நாட்டை சேர்ந்த பாடகர் ஒருவர் ‘நா ரெடி தான்’ பாடலை கொரியன் வெர்ஷனில் பாடி அதற்கு நடனமாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.