Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடிகர் ஆனந்தராஜ் கேரக்டர் இதுதான்.?? வைரலாகும் அப்டேட்

naai sekar returns movie viral update

திரை உலகில் காமெடி கிங் ஆக வலம் வரும் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் அவருடன் இணைந்து பிக்பாஸ் ஷிவானி, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க சந்தோஷ நாராயணன் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் மூன்று பாடல்கள் அண்மையில் வெளியாகி இணையத்தில் பயங்கரமாக வைரலானது.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்த்து எழுந்துள்ள நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் பிரபல வில்லன் மற்றும் காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ஆனந்தராஜ் அவர்கள் இப்படத்தில் தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக புதிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வரலாகி வருகிறது.