தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி வெளியான திரைப்படம் நானே வருவேன். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் வில்லனாக நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்று வருகிறது. பிரபு என்ற சாதுவான நபராகவும் கதிர் என்ற கொடூரமான வில்லனாகவும் தனுஷ் இந்த படத்தில் நடித்துள்ளார்.
தனுசுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் தனுஷ் குழந்தையுடன் ஓடி பிடித்து கொஞ்சி விளையாடும் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
#NaaneVaruvean this making stole my heart pic.twitter.com/wpWvSPjnZ8
— Manjula Shobha (@manjula1981) September 29, 2022