தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் மணிரத்தினம் அவர்களின் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்று சாதனையை படைத்துள்ளது. மேலும் இப்படத்தில் இடம்பெற்று இருந்த கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்திருந்தது. அதனால் இப்படத்தில் உள்ள கதாபாத்திரங்களை பலரும் ரீமேக் செய்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல காமெடி நட்சத்திரமாக இருக்கும் நாஞ்சில் விஜயன் அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் திரிஷாவின் குந்தவை கதாபாத்திரத்தை ரீமேக் செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பல ஸ்மைலிங் இமேஜ்களை பதிவிட்டு அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram