தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு மாறி மாறி புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு தொடங்கப்பட்ட சீரியல் நளதமயந்தி. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நாயகியாக பிரியங்கா நல்காரி நடித்து வந்தார். கடந்த வாரம் திடீரென அவர் சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தமயந்தி இறந்தது போல காட்டப்பட்ட நிலையில் அவரது தங்கை அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார் ஸ்ரீநிதி. அவர் நடிக்க தொடங்கிய ஒரே வாரத்தில் சீரியல் முடியப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சீரியலில் கிளைமாக்ஸ் எபிசோட் விரைவில் ஒளிபரப்பாக எனவும் கடைசி நாள் ஷூட்டிங் குறித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்க
View this post on Instagram