தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல் மூலமாக ஒளிபரப்பான ரோஜா சீரியலின் மூலம் பிரபலமடைந்து பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதா ராமன் சீரியலில் மாஸாக நடிப்பை கொடுத்து நடிப்பில் தனது இன்னொரு முகத்தை காட்டியவர் பிரியங்கா நல்காரி.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த சீதா ராமன் சீரியலில் இருந்து கணவரின் கோரிக்கையால் வெளியேறிய பிரியங்கா தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியலில் நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் குறித்த அறிவிப்பு ப்ரோமோ வீடியோவுடன் வெளியாகியுள்ளது, நளதமயந்தி என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியல் சமையல் கலையை மையமாக கொண்ட ஒரு கதையாக இருக்க போகிறது, தனது அம்மாவின் ஆசைப்படி வெறும் 20 ரூபாய்க்கு ருசியான சாப்பாடு கொடுக்கும் தமயந்தியை எல்லாரும் பாராட்டி வாழ்த்த அவர் கடைசியில் தனது அம்மாவின் போட்டோ முன்பு நின்று என் உயிர் இருக்கும் வரை உன் ஆசைப்படி இந்த ஹோட்டலை நடத்துவேன் என்று சொல்கிறார்.
தமயந்தியின் ஆசையை புரிந்து கொள்ளும் கணவன் கிடைப்பானா என்ற கேள்வியோடு இந்த ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது, ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ப்ரியங்காவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.