நாஞ்சில் விஜயன் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்த நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்..
இந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்த நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது.
இந்த குழந்தைக்கு தற்போது பெயர் சூட்டு விழாவை நடத்தியுள்ளார்.இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில் எங்கள் வீட்டு தேவதைக்கு கற்பகம் என்கிற நவனிகா என்று பெயர் சூட்டியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
இதில் கற்பகம் என்பது நாஞ்சில் விஜயன் உடைய அம்மாவின் பெயர் என்று சொல்லி இருக்கிறார். இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram