தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது.
வெங்கடேஷ் பட் வெளியேற அவருக்கு பதில் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்று வருகிறார். புதிய கோமாளியாக நாஞ்சில் விஜயன், ஷப்னம் ஆகியோர் களத்தில் இறங்கி உள்ளனர்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே பல பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் இனி பிரச்சனை இல்லாமல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது நாஞ்சில் விஜயன் இனிமேல் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன். இந்த நிகழ்ச்சியை தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். மேலும் எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த பதிவால் இது என்னடா புது பிரச்சனை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.