Tamilstar
News Tamil News

இது ஒர்க் அவுட் ஆகுதான்னு பார்ப்போம்…. நரகாசூரன் படத்தின் பெயரை மாற்றிய இயக்குனர்!

துருவங்கள் 16 படத்தின் மூலம் பிரபலமானவர் கார்த்திக் நரேன். இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நரகாசூரன். இதில் அரவிந்தசாமி, ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ஆனாலும் படத்தின் தயாரிப்பாளர் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பண பிரச்சினையால் படம் திரைக்கு வரவில்லை.

இதனால் கவுதம் மேனனும், கார்த்திக் நரேனும் டுவிட்டரில் மோதிக் கொண்டனர். அதன்பிறகு பல தடவை படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தும் ரிலீசாகாமல் தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் நரேன், தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பை மாற்றியதை கிண்டலடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கோயம்பத்தூர் என்பதற்கு (Coimbatore) என பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது (Koyampuththoor) என மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையை பார்த்து, “அட பாவிங்களா” என கலாய்த்துள்ளார்.

மேலும் தான் இயக்கியுள்ள நரகாசூரன் படத்திற்கு தற்போது ஆங்கிலத்தில் (Naragasooran) என பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை (Narakasuran) என மாற்றி வைத்தால் ஒருவேளை அந்த படமும் ரிலீஸ் ஆகுமா என்று பதிவிட்டுள்ளார்.