Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

நட்சத்திரம் நகர்கிறது திரைவிமர்சனம்

natchathiram-nagargirathu movie review

துஷாரா விஜயன் – காளிதாஸ் இருவரும் காதலித்து வருகிறார்கள். ஒரு சிறு பிரச்சனையால் இருவரும் பிரிந்து விடும் நிலைமை ஏற்படுகிறது. பின்னர், ஒரு நாடகக்குழுவில் இருவரும் எதிர்பாராத விதமாக பயிற்சிக்காக சேர்க்கிறார்கள். இவர்கள் இருவரையும் கதாநாயகன், கதாநாயகியாக வைத்து நாடகம் ஒன்று நடத்த நாடகக் குழு முயற்சி செய்து வருகிறது.

அந்த தருணத்தில் இருவரும் தாங்கள் எதற்காக பிரிந்தோம் என்று யோசிக்கிறார்கள். இறுதியில் அந்த நாடகம் நடைபெற்றதா? துஷாரா விஜயன் – காளிதாஸ் காதல் என்னவானது என்பதே படத்தின் மீதிக்கதை. தனக்கு தோன்றுவதை பேசி, பிடித்ததை செய்து, தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் துஷாரா விஜயனின் கதாபாத்திரம் திரையில் அவரை ரசிக்க செய்துள்ளது. காளிதாஸ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்துள்ளார்.

கலையரசனின் பிற்போக்கு தனமான நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமான காதல் கதைகளிலிருந்து ஒரு வித்தியாசமான காதல் உலகிற்கு நம்மை அழைத்து சென்றுள்ளார் இயக்குனர் பா. இரஞ்சித். படத்தில் ரசிக்க வைக்கும் சில காட்சிகள் நம்மை வேறோரு தளத்திற்கு அழைத்து செல்கிறது. இருந்தாலும் சில காட்சிகள் நம்மை இருக்கையில் இருந்து நெழிய வைப்பது நெருடலாகவே உள்ளது. தென்மாவின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ரங்கராட்டினம் பாடல் மற்றும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளது. கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்திலும் வண்ணங்களை அதிகப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ குறைவான நகர்வு.

natchathiram-nagargirathu movie review
natchathiram-nagargirathu movie review