முதுகு வலி பிரச்சனையில் இருந்து மருந்துகளை பயன்படுத்தாமல் வீட்டிலேயே குணப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
பொதுவாக முதுகு வலியை கட்டுப்படுத்த சில ஜூஸ்களை குடித்தால் தீர்வு கிடைக்கும். இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் முன் வெதுவெதுப்பான பாலில் அரை தேக்கரண்டி மஞ்சளை சேர்த்து குடிக்க வேண்டும். சுவைக்கு வேண்டுமானால் தேன் சேர்த்து குடிக்கலாம்.
மஞ்சளில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் எதிர்ப்பு பண்பு அதிகம் இருப்பதால் இது முதுகு வலி பிரச்சனையை குறைக்க உதவும்.
இரவில் நன்றாக தூங்குவதனால் நாம் பல வியாதிகளிலிருந்து விடுபடலாம். நல்ல தூக்கம் முதுகு வலியை கட்டுப்படுத்த உதவும். மேலும் யோகா செய்வது தசைகள் மற்றும் மூட்டுகள் ரத்த ஓட்டத்தின் ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியம் போன்றவற்றை அதிகரிக்கவும் முதுகெலும்பின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கவும் யோகா பெரும் அளவில் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் ஒரு அமைதியான அறையில் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை தியானம் செய்து ஓய்வு எடுக்க வேண்டும்.
இது முதுகு வலியை குறைக்க உதவுகிறது.
சூடான நீரில் ஹைட்ரோதெரபி செய்வதன் மூலம் வலி குறைவது மட்டுமில்லாமல் இது சிறந்த வலி நிவாரணியாகவும் உதவுகிறது. இதனைத் தொடர்ந்து ஒரு கிளாஸ் செர்ரி ஜூஸ் தினமும் குடித்து வந்தால் முதுகு வலியிலிருந்து விடுபடலாம். கிரீன் டீ மற்றும் இஞ்சி இரண்டுமே சேர்த்து குடிப்பதால் விரைவில் முதுகு வலி குணமடையும்.