Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மலேசியா கோவிலில் சுவாமி தரிசனம் செய்த விக்கி நயன்.வைரலாகும் போட்டோ

nayan vikki temple photos

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழும் நயன்தாரா, தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். கதை, கதாபாத்திரங்களை பொறுத்து ஒரு படத்துக்கு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதுதவிர விளம்பரங்களிலும் நடித்து வருமானம் ஈட்டி வருகிறார்.

வேறு சில தொழில்களிலும் நயன்தாரா முதலீடு செய்துள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களது மகன்கள் உயிர் மற்றும் உலக் ஆகியோரின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடினார். அவர்களது முகங்களையும் வெளியுலகுக்கு காண்பித்தனர்.

இந்த பிறந்தநாளை கொண்டாடிய கையுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி மலேசியாவுக்கு பறந்துள்ளனர். புதிய தொழில் நிறுவனம் தொடங்குவதற்காக சென்ற அவர்கள், அங்குள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் புதிய தொழில்களிலும் முதலீடு செய்து வருவதால் நயன்தாரா முன்பை விட சுறுசுறுப்பாக காணப்படுகிறார்.

nayan vikki temple photos
nayan vikki temple photos