Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தொடரும் விவாகரத்து விவகாரம், புகைப்படத்தின் மூலம் முற்றுப் புள்ளி வைத்த விக்கி, நயன்

nayanthara-and-vignesh-shivan-about-divorce-controversy details

தென்னிந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி படங்கள் பிஸியாக நடித்து வரும் இவர் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் இவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.

இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவிற்கும் இடையே கருத்து வேறுபாடு, இதன் காரணமாக பிரியப் போவதாக தகவல் பரவியது. ஆனால் பரவிய அந்த தகவல் உண்மை இல்லை என புகைப்படங்கள் மூலம் விளக்கம் அளித்துள்ளனர்.

இருவரும் வெளியில் சென்று உள்ள நிலையில் நெருக்கமாக மாறி மாறி முத்தமிட்டுக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு வதந்திக்கு ஃபுல் ஸ்டாப் வைத்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்