தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருவரின் பல வருடங்களாக காதலில் இருந்து வரும் நிலையில் சமீபகாலமாக இருவருக்கும் விரைவில் திருமணம் என தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இப்படியான சூழ்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் திருமண ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து இவர்களது திருமண ஏற்பாடுகளையும் தொடங்கி வைத்து விட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.