Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பழனி முருகன் கோவிலில் நயன்தாரா குடும்பம் சுவாமி தரிசனம்..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

படங்களில் இருவரும் பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா குழந்தைகளுடன் ட்ரிப் மற்றும் ஃபேமிலி புகைப்படங்கள், குழந்தைகளுடன் விளையாடும் வீடியோ என அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Nayanthara in Palani Murugan temple..!