தமிழ் சினிமாவில் நட்சத்திரங்கள் கல்யாணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அந்த திருமண வாழ்வில் வெகு சிலரே நினைத்துள்ளனர். அந்த வரிசையில் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி ஆகியோருக்கு தான் முதலிடம்.
அந்த வரிசையில் சிம்பு-நயன்தாரா ஜோடி இடம்பெறுவார்கள் என்று ரசிகர்கள் எண்ணினர். அதன்பிறகு பிரபுதேவா-நயன்தாரா ஜோடியை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
தற்பொழுது நயன்தாரா வெகுநாட்களாக காதலித்துக் கொண்டிருக்கும் விக்னேஷ் சிவத்தை கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறாராம்.
ஆனால் அந்த திருமணத்திற்கு முன்னால் திருநாகேஸ்வரர் கோயிலுக்கு சென்று வந்த பின்புதான் திருமண தேதியை முடிவு செய்ய உள்ளாராம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.