Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கல்யாண தேதியை குறித்த நடிகை நயன்தாரா.. எப்போது திருமணம் தெரியுமா?

Nayanthara-Vignesh Shivan Marriage Date

நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 5 வருடங்களாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இவர்களுக்கு எப்போது திருமணம் ஆகும் என்று தான், இவர்கள் இருவரும் இணைந்து புகைப்படங்கள் வெளியிடும் பொழுது, ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ஆனால் இதுவரை இவர்கள் இருவரும் தங்களது திருமணம் குறித்து எந்த விதமாக உறுதியான தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் நடிகை நயன்தாரா சமீபத்தில் ஜோசியர் ஒருவரை சந்தித்து தனது திருமண தேதியை குறித்துள்ளாராம்.

வரும் மார்ச் மாதத்தில் குறிப்பிட்ட நாள் ஒன்றை அவரை கூறியுள்ளதாகவும் தற்போது சில தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.