Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லீக் ஆன நயன்தாரா – விக்கி திருமண அழைப்பிதழ்! திருப்பதி இல்லை.. திருமணம் இந்த இடத்தில் தான்

nayanthara wedding invitation

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அடுத்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்ய இருக்கின்றனர் என முன்பிருந்தே தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில் தற்போது அவர்கள் திருமண பத்திரிகை லீக் ஆகி இருக்கிறது. அதில் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் தான் திருமணம் நடக்கிறது என குறிப்பிட்டு இருக்கின்றனர். இதன் மூலமாக அவர்கள் திருமணம் எங்கு நடக்கிறது என்கிற கேள்விக்கு ஒரு வழியாக பதில் கிடைத்துவிட்டது.

திருமணத்திற்கு முன்பு தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு கோவில்களில் விக்கி – நயன் இருவரும் பூஜைகள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மகாபலிபுரத்தில் நடக்க இருக்கும் திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமண பத்திரிகை தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது. இதோ..