Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனது கணவருடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நஸ்ரியா!

நேரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா நசீம். இதன்பின் 2013ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

மேலும் இந்த ஒரு படம் நடிகை நஸ்ரியாவுக்கு தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பேர் சொல்லும் ஓர் படமாக அமைந்தது. இதன்பின் மலையாள நடிகரான பகத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதன்பின் நீண்ட வருடங்கள் கழித்து சமீபத்தில் டிரான்ஸ் எனும் படத்தில் தனது கணவருடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தன் கணவருடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை நஸ்ரியா.

இதோ அந்த புகைப்படம்…