தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
மேலும் இந்த படத்தில் கதிரின் அப்பாவாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ். உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.