தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலிப்குமார். நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமான இவர் அதன் வரவேற்பை தொடர்ந்து டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெய்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், விநாயகன், வசந்த் ரவி, சுனில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இன்று நெல்சன் திலிப் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வாழ்த்துக்களை குவித்து வைரலாகி வருகிறது.
#Jailer Shooting spot pics released on the birthday special of Nelson📸💥
Waiting to see the banger which Neslon have instore for the movie🌟 pic.twitter.com/Y3lCMfkCpS
— AmuthaBharathi (@CinemaWithAB) June 21, 2023