Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டாக்டர் படம் எப்படி இருக்கு?? முதல் முறையாக ரகசியத்தை உடைத்த இயக்குனர்.!!

டாக்டர் படம் எப்படி இருக்கும் என முதல் முறையாக இரகசியத்தை உடைத்துள்ளார் இயக்குனர் நெல்சன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது டாக்டர் திரைப்படமும் அயலான் என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது.

அயலான் திரைப்படத்தை நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்க டாக்டர் திரைப்படத்தை நெல்சன் திலிப்குமர் அவர்கள் இயக்கியுள்ளார்.

கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் டாக்டர் திரைப்படம் கைகலப்பும் கலகலப்பும் கலந்த திரைப் படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் டாக்டராகவும் மருத்துவத்தோடு சேர்த்து அவருக்கு இன்னொரு வேலையும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு மேலாக சொன்னால் கதை முழுவதும் வெளியே தெரிந்து விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் என்பவர் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.