Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஷால் பட நடிகையின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்த நெட்டிசன்கள் – போலீசில் புகார்

Netizens who pornographically morphed the actress' photo - complained to the police

தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் நடித்தவர் மாதவி லதா. தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். மாதவி லதா அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தெலுங்கு சினிமா விருந்துகளில் போதை பொருள் நடமாட்டம் உள்ளது என்றும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

இந்நிலையில் மாதவி லதா சைபராபாத் போலீசில் தனது புகைப்படத்தை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவதூறு பரப்புவதாக புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மாதவி லதா கூறும்போது “ஆந்திராவில் கோவில்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை கண்டித்து பேசினேன். அதன்பிறகு மர்ம நபர்கள் வலைத்தளத்தில் என்னை மோசமாக திட்டி கருத்துகள் பதிவிடுகிறார்கள். எனது புகைப்படத்தை மார்பிங் செய்தும் பதிவேற்றி உள்ளனர். எனது நடத்தை பற்றியும் கேவலமாக பேசுகிறார்கள். இதனால் சொந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.” என்றார்.