தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.
‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் திடீர் என்று ‘நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ படத்தின் தமிழ் ரீமேக் ‘நெற்றிக்கண்’ என்று கூறப்படுகிறது.
Happy to share you all👍
Here it is the first look of #Netrikann #NetrikaanFirstLook 🎥 @VigneshShivN @DoneChannel1 @Milind_Rau pic.twitter.com/WdYmLWt6zu— Nayanthara✨ (@NayantharaU) October 22, 2020