தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களில் சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். குறிப்பாக நல்ல கதையம்சம் உள்ள படங்கள் எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.
அந்த வகையில் தற்போது சமூகத்திற்கும் பெண்களுக்கும் தேவையான கதைகளத்துடன் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. ஏமாற்றுக்காரர்கள், பிளாக் மெயில் செய்பவர்களிடம் இருந்து பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகிறது.
ஈஷான் என்ற அறிமுக நடிகர் ஹீரோவாகவும் பிரனாலி என்ற அறிமுக நடிகை நாயகியாகவும் நடிக்கும் இந்த படத்திற்கு மாரிச்செல்வன் கதை எழுத ஈஷான் நடிப்பது மட்டுமில்லாமல் திரைக்கதை அமைத்து இயக்குகிறார். எம் ஜி பி மாஸ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வழங்க கே எஸ் விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். மா தியாகராஜன் என்பவர் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.
மேலும் இந்த படத்தில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்ரமணி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைந்து படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெகு விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.