தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆனால் திறம்பட ஆராயாமல் தீர்ப்பு கொடுப்பது, தேவையில்லாத விஷயத்திற்கு ஓவர் ரியாக்ட் செய்வது கேட்க வேண்டிய கேள்விகளை தக்க நேரத்தில் கேட்காமல் அது பிரச்சனையாக வெடிக்கும் போது கேள்வி எடுப்பது என இதுவரை இல்லாத அளவிற்கு முழுக்க முழுக்க எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறார். மேலும் தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே அவர் பிக் பாஸ் மேடையை பயன்படுத்துகிறார் என்ற விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது.
சமூக வலைதளங்கள் முழுக்க கமலுக்கு எதிரான கருத்துகளை ஓங்கி நிற்கும் நிலையில் அவர் தொகுத்து வழங்கும் கடைசி சீசன் இதுவாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் அடுத்த சீசனில் தொகுத்து வழங்குவதற்காக விஜய் டிவியின் ஐந்து நடிகர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அது லிஸ்டில் முதல் ஆளாக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் ஏற்கனவே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அர்ஜுன், விஜய் சேதுபதி மற்றும் சரத்குமார் ஆகிய நடிகர்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல் இல்லாமல் யார் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.