Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘வலிமை’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்

New information about the 'Valimai' First Look release

அஜித்குமாரின் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹூமா குரேசி அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வலிமை பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வலிமை படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்னரே பர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். வலிமை பட ஷூட்டிங் அடுத்த மாதத்திற்குள் முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

ஆகையால் அடுத்த மாதம் வலிமை பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.