ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த தொலைக்காட்சி சேனலில் தொடர்ந்து அடுத்தடுத்து புது புது சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கி வருகின்றன. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் மதியம் 1:30 மணிக்கு இதயம் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான தெய்வம் தந்த பூவே சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆமாம், வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி இந்த சீரியலின் கிளைமேக்ஸ் காட்சி இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுமட்டுமின்றி நளதமயந்தி மற்றும் ஆபிஸ் டைம் என மேலும் இரண்டு சீரியல்கள் வெகு விரைவில் தொடங்கும் எனவும் தெரியவந்துள்ளது. இதனால் ஜீ தமிழ் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அதிரடி கொண்டாட்டம் தான்.