தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் காற்றுக்கென்ன வேலி. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இப்படியான நிலையில் சூர்யா வேடத்தில் நடித்து வரும் சுவாமிநாதன் அனந்தராமன் வேறொரு சீரியலில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்குவில் ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகி வரும் நுவ்வு நேவா பிரேமா என்ற சூப்பர் ஹிட் சீரியலின் ரீமேக்காக ஒளிபரப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. தெலுங்குவில் சுவாமி நாதன் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனால் தமிழிலும் அவரே ஹீரோவாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த சீரியலும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.