Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் ஆதியுடன் இணைவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிக்கி கல்ராணி

nikki galrani officially announces joining actor Aadi

தமிழில் மிருகம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ஆதி, தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடுபுலி, அரவான், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் என வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தெலுங்கில் பிசியான நடிகராக வலம்வரும் இவர், பாட்னர், கிளாப், குட் லக் ஷகி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ஆதி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இவர் அடுத்ததாக ‘சிவுடு’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். நடிகர் ஜெய் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடிக்க உள்ளாராம். ஏற்கனவே யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் ஆதிக்கு ஜோடியாக நடித்த நடிகை நிக்கி கல்ராணி, தற்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார்.

நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. ஆனால் இருவரும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.