தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் தான் நிக்கிகல்ராணி. இவர் நடித்த முதல் படமான டார்லிங் படத்திலே ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அதன்பின் கலகலப்பு 2, சார்லி சாப்ளின், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்று முன்னணி நடிகர்களோடு இணைந்து நிறைய படங்கள் நடித்துள்ளார்.
இதையடுத்து இவர் நடித்த மரகத நாணயம் படத்தின் கதாநாயகனான ஆதி என்பவரை காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்தோடு சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது கலர்ஸ் தமிழ் என்ற சேனலில் ஒலிபரப்பாகும் “வெல்லும் திறமை” என்ற பிரபல நிகழ்ச்சியில் நடுவர்களாக இருக்கும் நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான்ஹுசைனி மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்று உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நிக்கி கல்ராணி. அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.