Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல். வைரலாகும் புரோமோ வீடியோ

ninaithen-vanthai-serial-promo video

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய இதயம், சந்தியா ராகம், நளதமயந்தி போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அடுத்த புது வரவாக களமிறங்க உள்ளது நினைத்தேன் வந்தாய் என்ற சீரியல்.

கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாக நடிக்க கீர்த்தனா பொதுவாள் நாயகியாக நடிக்கிறார். வெகுவிரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கணேஷ் வெங்கட்ராம் டாக்டர் வேடத்தில் நடிக்கிறார் என்பது ப்ரோமோ மூலம் உறுதியாகி உள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த சீரியல் ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

வெகு விரைவில் சீரியல் ஒளிபரப்பு நேரம் மற்றும் ஒளிபரப்பு தொடங்கும் தேதி ஆகிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கலாம். அதே சமயம் முடிவுக்கு வரப்போவது எந்த சீரியல் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh)