Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சந்தித்துக்கொண்ட போட்டியாளர்கள்.. வைரலாகும் புகைப்படம்

Niroop With Gang After Bigg Boss Ultimate

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நிறைவு பெற்றதை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் நேற்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்றனர். நேற்று நடந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் பாலா டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார் ‌‌அவருக்கு அடுத்ததாக நிரூப் இரண்டாம் இடம் பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நிரூப், அனிதா தாமரைச்செல்வி மற்றும் சுருதி ஆகிய நால்வரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.