Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அதே அழகு! பந்தா இல்லாத நடிகை! அனுஷ்காவின் தோற்றத்தை பற்றி பேசிய பிரபல நடிகர்

அனுஷ்கா தமிழ், தெலுங்கு படங்களில் முக்கியவத்துவம் வாய்ந்த நடிகை. அவரின் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் நிசப்தம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் மாதவனும் நடித்துள்ளார்.

சென்னையில் அவர் இதுகுறித்து பேட்டியளித்தார். அதில் அவர் அனுஷ்காவும், நானும் முதன் முதலாக இரண்டு படத்தில் ஜோடியாக நடித்திருந்தோம். அப்படத்தில் அவர் அவ்வளவு அழகாக இருப்பார்.

Anushka Shetty Movie Nishabdham Posters Out R Madhavan Silence

சினிமாவுக்கு அவர் அச்சமயம் புதியவரும் கூட. 14 வருடங்கள் கழித்து சைலென்ஸ் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளோம். அனுஷ்கா அதே அழகு தான். தோற்றத்தில் எந்த மாறுபாடும் இல்லை. 14 வருடங்களில் அவர் அற்புதமான நடிகையாகிவிட்டார் என கூறியுள்ளார்.

ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள நிசப்தம் படம் தமிழில் சைலென்ஸ் என அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகிறது.