தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன் நடந்து முடிந்ததை தொடர்ந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஐந்து பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் கலந்து உரையாடிய போது நிகழ்ச்சியில் இருந்து நிவாஸினி வெளியேற்றப்பட்டார்.
மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையான நிவாசினி பிக் பாஸ் வீட்டில் 42 நாட்கள் தங்கி இருந்தார். இவருக்கு ஒரு நாளைக்கு 18000 ரூபாய் சம்பளம் என சொல்லப்படுகிறது. அதன் மூலம் 42 நாட்களுக்கு ஏழு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Nivashini Salary for Bigg Boss 6 tamil