பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி ஆகியோர் நடித்த ராதே இந்தி படம் கொரோனாவால் தியேட்டர்களுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் ரம்ஜான் தினத்தன்று வெளியிடப்பட்டது. பணம் செலுத்தி படம் பார்க்கும் முறையில் இந்த படத்தை வெளியிட்டு இருந்தனர்.
ஆனால், படமோ ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 249 ரூபாய் செலுத்தி படம் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததால், ராதே படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.
இதனிடையே, ரசிகர்கள் பலர் திருட்டு இணையதளத்தில் படத்தை பார்த்தது குறித்தும் சல்மான் கோபமடைந்தார். படத்தைக் கிண்டலடித்து விமர்சனம் செய்தவர் மீது சல்மான் கான் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சல்மானின் இந்த நடவடிக்கை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
ராதே படத்தை ஓடிடி-யில் வெளியிட்டதால், அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருவதையடுத்து, சல்மான் கான் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். இனி, தன்னுடைய படங்களை ஓடிடியில் வெளியிடப் போவதில்லை, தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவேன் என்று சொல்லிவிட்டாராம்.