Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அதை யாரும் நம்பாதீங்க… சிபிராஜ் அறிவிப்பு

No one can believe it ... Sibiraj announcement

சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்ற அறிவிப்புடன் பெண்களைக் குறிவைத்துப் பரப்பப்படும் விளம்பரங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பிரபலமான நடிகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சில மர்ம நபர்கள் இத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், மர்ம கும்பல் தற்போது நடிகர் சிபிராஜின் பெயரைப் பயன்படுத்தி பெண்களைக் குறிவைத்துள்ளது. சிபிராஜ் படத்தில் நடிக்க ஆட்கள் தேவை எனக் குறிப்பிட்டுள்ள அந்த கும்பல், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப வயது வித்தியாசத்தையும் குறிப்பிட்டுள்ளது. இந்த விளம்பரம் சிபிராஜின் கவனத்திற்கு வர, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது என் கவனத்திற்கு வந்தது. இது போலியானது. இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. யாரும் நம்பாதீங்க. இதனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.