Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அதிகாரப்பூர்வமாக லியோ படத்தின் முதல் நாள் வசூல் அறிவித்த படக்குழு

Official Announcement About Leo Day 1 Collection Update

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இருந்த போதிலும் படத்தின் முதல் நாள் வசூல் மிகப்பெரிய அளவில் கிடைத்துள்ளது. முதல் நாளில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 148.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்து லியோ ப்ளாக் பஸ்டர் எனவும் தெரிவித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்ட்ரீட் ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவான இந்த படத்தில் சஞ்சய் தத் அர்ஜுன் திரிஷா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.