Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா 41 குறித்து வெளியான தகவல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்

Official Announcement of Suriya 41 Movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் வாடிவாசல் படத்தில் டெஸ்ட் ஷூட்டில் பங்கேற்று வருகிறார்.

மேலும் அடுத்ததாக தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள சூரியா 41 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பாலா இயக்கக்கூடிய என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது. இதற்கு முன்னதாக சூர்யா பாலா இயக்கத்தில் பிதாமகன், நந்தா என 2 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.