தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
வசூல் ரீதியாக இப்படம் மிகுந்த வெற்றியைப் பெற்று வரும் நிலையில் இதை அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 68 படத்தில் பூஜை வீடியோ இன்று மதியம் 12.5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது படத்தின் பூஜை வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து இந்த படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://twitter.com/Ags_production/status/1716704893426364590