Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முன்னணி நடிகர்களின் கேரக்டரில் சிறுவயதில் நடித்த பிரபலம் இவர் தான்.. வைரலாகும் போட்டோ

old-childhood-artist photos
old-childhood-artist photos
old-childhood-artist photos

ரசிகர்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கென தனி ஸ்டைலை அமைத்துக் கொண்டு அதன் மூலம் பல ரசிகர்களை உருவாக்கி தற்போது உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது சிறு வயது கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து ரசிகர்களின் மனதில் சிறு வயது சூப்பர் ஸ்டாராக அப்போது பிரபலமான நடிகர் சுரேஷின் தற்போதைய புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர் படிக்காதவன் படத்தில் சிறுவயது சூப்பர்ஸ்டாராக நடித்திருந்தார். இவர் ரஜினிக்கு மட்டுமல்லாமல் கமல், அமிதாப் பச்சன், விஜயகாந்த், சரத்குமார் என பல ஹீரோக்களுக்கு பல மொழிகளில் சிறுவயது ரோலில் நடித்து அசத்தியுள்ளார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் சிறுவயது கேரக்டரில் நடித்து ரசிகர்களில் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

தற்போது இவர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரின் பெயர் சூர்யா கிரண். இவர் சிறந்த திரைக்கதை ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தனம் கதாபாத்திரத்தில் வரும் நடிகை சுஜிதாவின் சகோதரர் ஆவார்.

இவர் சரத்குமாரின் சமுத்திரம் திரைப்படத்தில் தங்கையாக நடித்த நடிகை கல்யாணியை தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இது என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.