தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தளபதி விஜய் இன்று தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
இவருடைய பிறந்த நாளை ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக் கூறி கொண்டாடி வருகின்றனர். விஜயின் பிறந்தநாள் விருந்தாக்க வாரிசு படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் வெளியாகின.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சென்னை ஓ எம் ஆர் பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அப்பகுதியில் உள்ள ஆதரவற்ற இல்லத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்று மதியம் விருந்தளித்து விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக விஜய் ரசிகர்களின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.