Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரஞ்சிதமே பாடலின் மேக்கிங் வீடியோ வைரல்

one-more-making-video-for-ranjithame-song

ரசிகர்களால் அன்போடு இளைய தளபதி என்று அழைக்கப்பட்டு வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் கடந்த மாதம் 11ஆம் தேதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது ரசிகர்களால் தற்போது வரை திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் தமன் இசை அமைத்திருந்த அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக அனைவரையும் கவர்ந்த ரஞ்சிதமே பாடல் குழந்தைகள் முதல் வயதானவர் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்துள்ளது. இந்நிலையில் இப்பாடலின் மேக்கிங் வீடியோக்கள் சின்ன சின்னதாக அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதேபோல் தற்போது மீண்டும் இப்பாடலில் இருந்து ஒரு சிறிய மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.