Tamilstar
Health

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் வெங்காயம்..

Onion helps diabetics

நீரிழிவு நோயாளிகள் வெங்காயம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை குறைக்குமா என்று பார்க்கலாம்.

பொதுவாகவே இன்றைய சூழ்நிலையில் நீரிழிவு நோயாளிகள் அதிகமாகவே இருந்து வருகின்றனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாகவே உணவு முறைகளையும் பின்பற்றுவது வழக்கம். ஏனெனில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் சேர்க்கப்படுவது வெங்காயம். வெங்காயம் நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வெங்காயம் முதன்மை பங்கு வகிக்கிறது ஏனெனில் வெங்காயத்தில் பல நன்மைகள் இருக்கிறது. அதில் முக்கியமாக இருப்பது பிளாவனாய்டுகள் இது ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். மேலும் வெங்காயச் சாறு ரத்த சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் வெங்காயத்தை பட்சயாக சாப்பிடுவதன் மூலம் கூடுதல் நன்மை அளிக்கும்.

அப்படி சாப்பிடும் போது நம் உடலில் ஏற்படும் மாற்றத்தை எளிதாக நம்மால் உணர முடியும். வெங்காயத்தில் சாண்ட்விச், சூப் ,சாலட், செய்து உணவில் கலந்து கொள்வது சிறந்தது.

இப்படி வெங்காயத்தில் இருக்கும் நன்மைகளை உணர்ந்து ஆரோக்கியத்துடன் வாழலாம்.