Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ராஷ்மிகா மந்தனா

open talk with actress rashmika mandhana

தென்னிந்திய சினிமாவில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ராஷ்மிகா மந்தனா. தற்போது ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆக மாறியிருக்கும் இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களுக்கு பரிச்சயமானார். அதன் பிறகு தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் மீண்டும் தமிழ் தெலுங்கு என பழமொழிகளில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா தி ரைஸ் என்னும் அல்லு அர்ஜுனின் திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பல ரசிகர்களின் மனதில் லேட்டஸ்ட் கிரஷ் ஆக வலம் வருகிறார். தற்போது தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் அப்படத்தை தொடர்ந்து புஷ்பா 2, மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது நடிப்பில் நேற்றைய தினம் இந்தியில் வெளியாகி இருக்கும் “குட் பை” என்ற திரைப்படத்தில் அமிதாபச்சன் உடன் இணைந்து நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஷ்மிகா தனது காதல் வதந்திகள் குறித்து அப்பேட்டியாளர்களிடம் ஓப்பனாக பேசியிருக்கிறார். அது தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் அவர், “குடும்பத்தினருக்கும், நண்பருக்குமே என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. காதலில் இருந்தால் அதற்காக நிறைய நேரங்களை செலவிட வேண்டும். காதலுக்கு பொறுமை மிக அவசியம் தற்போது எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. எதிர்காலத்தில் எனக்கு காதல் வந்தால் அந்த தகவலை சொல்கிறேன் என்று ஓபனாக பேசி தனது காதல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

open talk with actress rashmika mandhana
open talk with actress rashmika mandhana