மலையாளத்தில் வெளியான “பிரேமம்” படம் மூலம் அனைவருக்கும் மலர் டீச்சராக பரிச்சயமானவர்தான் சாய் பல்லவி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் தனது நடிப்பாலும், நடனத்தாலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் அதிகம் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்துக் கொண்டிருக்கும் சாய் பல்லவியின் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வருகின்றனர்.
சமீபத்தில் பிரபல நடிகர் ராணா ரகுபதியுடன் இவர் இணைந்து நடித்த “விரத பர்வம்” திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நக்சலைட் ரோலில் சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசீர்க்கு முன்பாக சாய்பல்லவி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டிருந்தார்.
தற்போது இந்த “விரத பர்வம்” படத்திற்காக யூடியூப் சேனல் ஒன்றில் சாய்பல்லவி மற்றும் ரானா டகுபதி இருவரும் பேட்டி அளித்துள்ளனர். இப்படத்தில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் பல்லவி மிகவும் சிரமத்துடன் ராணாவிற்கு காதல் கடிதம் எழுதி கொடுத்திருப்பார். இந்த சீன் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த சீனை குறித்து சாய்பல்லவியனிடம் தொகுப்பாளர் கேட்ட பொழுது தனது நிஜ வாழ்க்கையிலும் இதே போல் லவ் லெட்டர் எழுதி மாட்டிக் கொண்டுள்ளதாக மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது சிறு வயதில், நான் 7 ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு பையனுக்கு லவ் லெட்டர் எழுதி, எங்க அம்மா – அப்பாவிடம் மாட்டி, செம அடி வாங்கினேன் என்று கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறிய இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.